FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு

கேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் அறிவித்துள்ளது குறித்து...

வி.டி. சதீசன் - பிடிஐ
பகிர்:

கேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் இன்று (மே 17) அறிவித்தார்.

அதில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சென்னிதாலா, முரளீதரன், சன்னி ஜோசப் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பேரவைத் தலைவராக திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால். வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே போட்டி நிலவி வந்தது. இதனால், கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதாக நீண்ட இழுபறிக்குப் பிறகு மே 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் வி.டி. சதீசன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய திடலில் நாளை (மே 18) காலை 10 மணிக்கு முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இத்துடன் 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

அமைச்சர்கள் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சென்னிதாலா, முரளீதரன், சன்னி ஜோசப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் பி. கே. குஞ்சலிகுட்டி, மோன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், அனூப் ஜேக்கப், சி.பி. ஜான், ஏ.பி. அனில் குமார், என். ஷம்சுதீன், பி.சி. விஷ்ணுநாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments