இது வெறும் பூச்சி பிரச்னை அல்ல; நாடு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி விவகாரம் மூலம் நாடு ஏதோ சொல்ல முயல்வதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி விவகாரம் மூலம் நாடு ஏதோ சொல்ல முயல்வதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து, திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "வெறும் 4 நாள்களில் பதினைந்து மில்லியன் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இது ஒரு பிரச்னை அல்ல, இந்த நாடு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிக்கிறது. நாம் அதனைக் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
Advertisement
Advertisement
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே, ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற பெயரில் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கினார்.
அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவற்றை கொள்கையாக அறிவிக்கப்பட்ட இந்த கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை, நான்கே நாள்களில் 1.5 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடரத் தொடங்கினார்கள்.
ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.
Cockroach Janta Party: This Country is trying to tell it is something, says Kanimozhi MP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.