நீட் கட்டணம் திருப்பி அளிப்பு நடைமுறை தொடக்கம்! என்ன செய்ய வேண்டும்?
நீட் கட்டணம் திருப்பி அளிப்பு நடைமுறை தொடங்கியிருக்கிறது.
நீட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்து, மறுதேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள், தேர்வுக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி வழங்குவதற்கான இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கியிருக்கிறது.
தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இதற்கான லிங்க் உருவாக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, தேர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஜூன் மாதம் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நீட் தேர்வுக் கட்டணத்தை திரும்ப அளிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
பணப்பரிவர்த்தனைக்கு வங்கிக் கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டணம் திரும்ப அளிப்பதற்கான இணையதளத்தில் மாணவர்கள் அல்லது பெற்றோர், வங்கி விவரங்கள், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு, வங்கிப் பெயர், கிளை என அனைத்தையும் சரியாக உள்ளிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுப் பிரிவினர் செலுத்திய ரூ.1700, ஓபிசி பிரிவினர் செலுத்திய ரூ.1600, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் செலுத்திய ரூ.1000, வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்திய ரூ.9500 அவரவர் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
NTA -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
நீட் யுஜி மறுதேர்வு 2026 பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
வங்கி கணக்கு விவரங்களை கவனமாக உள்ளிடவும்
IFSC குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரைச் சரிபார்க்கவும்
பணத்தைத் திரும்பப்பெறும் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.
படிவம் சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கை வைத்துக் கொள்ளவும்.
வரும், 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமாா் 5,500 மையங்களில் நடைபெற்ற தோ்வை, விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் (97 சதவீதம்) எழுதியிருந்தனர். இவர்கள் மீண்டும் ஜூன் 21ஆம் தேதி நடக்கும் நீட் தேர்வை எழுதத் தயாராகி வருகிறார்கள்.
NEET fee refund process begins! What to do?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.