முகப்பு
இந்தியா

வதைக்கும் வெய்யில்.. நாட்டில் அதிக வெப்பம் பதிவான பகுதி இதுதான்! 118 டிகிரி பதிவு

வெய்யிலோ வெய்யில் என்று நாட்டு மக்களை கோடை வெப்பம் வதைத்து வருகிறது.

குழந்தையுடன் குடைபிடித்து செல்லும் பெண் - PTI
பகிர்:

கோடைக்காலம் தொடங்கியது முதலே, மே 20ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து வெப்ப அலை வீசியிருக்கிறது.

சென்னையில் நேற்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஒரு பகுதியில் பதிவாகியிருக்கிறது. அது எந்த நகரம், அப்பகுதி மக்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.

நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா நகரில்தான் நேற்று கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று இந்த நகரில் பதிவான வெய்யில்அளவு 118 டிகிரி ஃபாரன்ஹீட். இது 4.5 டிகிரி அளவுக்கு இயல்பை விட அதிக வெப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதுபோல, அடுத்து வரும் நாள்களிலும் இந்தப் பகுதியில் கடுமையான வெய்யில் இருக்கும், வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் பகுதியிலும் மிகவும் வெப்பமான நகராகப் பதிவாகியுள்ளது. இங்கு 115.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

அடுத்தடுத்த இடங்களில் பிலானி, சுரு, ஆல்வார், கோட் போன்ற நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை உள்பட தமிழகத்தில் நேற்று கடுமையான வெப்பம் பதிவான நிலையில், நாட்டிலேயே தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் தாக்கியிருக்கிறது.

சென்னை மீனம்பாக்கதில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. வேலூர் - 106.88, திருத்தணி - 106.7, நுங்கம்பாக்கம் - 105.26 என பதிவாகியிருந்தது.

summary

The scorching sun.. This is the hottest place in the country! 118 degrees recorded

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments