ரெடி.. ஸ்டெடி.. கோ..

25. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி

டாக்டர் விஸ்வநாதன்

கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அமர்ந்தபடியே வேலை செய்வதால் எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம் 

அமர்ந்தபடியே வேலை செய்தல்:

இன்றைய நாட்களில் கணினி மற்றும் செல்பேசி அதிகம் பயன்படத் தொடங்கிவிட்டது.  நாம் எல்லோரும் அதன் முன்னே மிக நீண்ட நேரம் செலவிடுகிறோம். சொல்லப் போனால் சிலரின் வாழ்க்கை கணினியில்தான் அடங்கியுள்ளது. நான் கூறுவது அமர்ந்தபடியே வேலை செய்வோர் (Sitting Job) உள்ளவர்கள். ஆம் இத்தகைய வேலை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 6-8 மணி நேரம் அமர்ந்தபடியே வேலை செய்கின்றனர். இன்றைய ஆராய்ச்சிகள் "Sitting is new Smoking" எனக் கூறுகின்றன. ஏனெனில் அதிக நேரம் உட்காருவதால் முதுகு வலி மட்டுமல்ல உயிரையே கொல்லும்  நோய்களும் வரும் எனக் கூறுகின்றன. இப்போது அதிக நேரம் உட்காருவதால் முதுகு வலி எப்படி ஏற்படுகின்றது என்பதை பார்ப்போம். 

நம் முதுகுத் தண்டில் ஒன்றன் மேல் ஒன்றாக கிட்டத்தட்ட நூற்றுகணக்கான தசைகள் உள்ளன. இவை எல்லாம் Postural Muscles என அழைக்கப்படும் மிகவும் ஆழமான தசைகள். அதாவது இந்த தசைகள் உங்களின் உட்காரும், நிற்கும், நடக்கும் Posture-களை தீர்மானிக்கும். எனவே இந்த தசைகளில் எதாவது பிரச்னை ஏற்பட்டால், அது உங்களின் முழு உடலின் Posture-ஐ பாதிக்கும்.

நான் மேலே கூறியது போல் நீங்கள் அதிக நேரம் உட்கார உட்கார உங்களின் இந்த தசைகள் கடினமடைகின்றன (Stiff). இவ்வாறு நாளுக்கு நாள் இந்த தசைகள் கடினமடைந்து உங்கள் முதுகுத் தண்டின் இயக்கத்தை (Mobility) குறைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு இந்த தசைகளின் கடினத்தன்மை உங்கள் முதுகெலும்பின் வடிவத்தை (Shape) பாதிக்கச் செய்கின்றன. உதாரணமாக, நம் முதுகெலும்பின் சரியான வடிவத்தை பார்ப்போம். உங்கள் கழுத்து முதுகெலும்பு குழிந்தும் (Concave), மேல் முதல் நடுமுதுகு குவிந்தும் (Convex), கீழ் முதுகு குழிந்தும் (Concave) இருப்பது தான் சரியான வடிவம் (Shape). ஆனால் நாம் அதிக நேரம் உட்கார்ந்து, உட்கார்ந்து இந்த வடிவம் மாறி விடுகிறது. அதாவது கழுத்து வடிவம் சமாகவும்(Flat), நடுமுதுகு அதிகம் கூன் விழுந்தும், கீழ் முதுகு அதிகம் குழிந்து (Exaggerated arch) விடுகின்றன.  இவை எல்லாம் நாம் அதிக நேரம் ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றத்தினால் நம் உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்றங்களினால் உங்களுக்கு வலி, இயக்கக் குறைவு (Immobility), தசைகளின் இழுவைத் தன்மை குறைவு (Inflexibility) போன்றவை ஏற்படும். போகப் போக தசைகளின் மீதான அழுத்தம் அதிகமாகி 'Disc' ஐ அழுத்த ஆரம்பிக்கும். இதனால் உங்களுக்கு மறத்துப் போதல், ஊசி குத்துவது போன்ற வலி, வலுவிழப்பு (Weakness) போன்றவையும் ஏற்படும்.

இதை தவிர்க்க நீங்கள் அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தில 40  நிமிடங்களுக்கு மேல் உட்காருவதை தவிர்க்க வேண்டும். மேலும் உட்கார்ந்த இடத்திலேயே சில இயக்கப் (Mobility) பயிற்சிகள் செய்வது நல்லது 
உங்கள் முதுகெலும்பின் இயக்கத்துக்கு  தேவையான உடற்பயிற்சிகளை (Exercises) Musculoskelatal பிஸியோதெரபிஸ்டிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT