முகப்பு
கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:06 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அன்பழகன் (41). இவா், கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் கோயில் சாலையில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். அன்பழகன் வெள்ளிக்கிழமை மாலை பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அன்பழகனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments