முகப்பு
மகளிர்மணி

மக்கானா பிரியாணி

பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து சிறிது நெய், குங்குமப்பூ சேர்த்து வதக்கி, உப்பு, இரண்டு டம்ளர் நீர் விட்டு உதிராக வடிக்கவும்.

Updated On : 5 ஜூலை 2026, 4:00 am IST
மக்கானா பிரியாணி
பகிர்:

தேவையான பொருள்கள்:

மக்கானா விதைகள், பாசுமதி அரிசி, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கிண்ணம்

தண்ணீர் - 2 கிண்ணம்

Advertisement

Advertisement

குங்குமப்பூ - 3 இழைகள்

பூண்டு - 2 பல்

இஞ்சி -சிறிய துண்டு

பச்சை மிளகாய்-2

நெய் - 4 மேஜை கரண்டி

தயிர் - ஒரு சிறு கிண்ணம்

உப்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கொத்துமல்லி, புதினா இலைகள் - தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து சிறிது நெய், குங்குமப்பூ சேர்த்து வதக்கி, உப்பு, இரண்டு டம்ளர் நீர் விட்டு உதிராக வடிக்கவும்.

வாணலியில் சிறிது நெய்விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கின பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். மக்கானா விதைகள் சேர்த்து வதக்கி தயிர், பாசுமதி சாதத்துடன் கலக்கவும். புதினா, கொத்துமல்லி தழைகளால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும். மக்கானா பிரியாணி ஊரைக் கூட்டும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments