முகப்பு
மகளிர்மணி

பலாப்பழம், பனங்கருப்பட்டி இலைக் கொழுக்கட்டை

பலாப்பழ சுளைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் சேர்த்து பலாப்பழ விழுதை வதக்கவும்.

Updated On : 28 ஜூன் 2026, 12:00 am IST
பலாப்பழம், பனங்கருப்பட்டி இலைக் கொழுக்கட்டை
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - 2 கிண்ணம்

பலாப்பழச் சுளை - 10 முதல் 12

Advertisement

Advertisement

பனங்கருப்பட்டி, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம்

ஏலக்காய் - 4

உப்பு - சிறிதளவு

நெய் - ஒரு தேக்கரண்டி

வாழை இலை

செய்முறை:

பலாப்பழ சுளைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் சேர்த்து பலாப்பழ விழுதை வதக்கவும். அதில் பொடித்த பனங்கருப்பட்டி சேர்க்கவும். கரைந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். பச்சரிசி மாவில் சிறிது உப்பு சேர்க்கவும்.

சூடான தண்ணீர் ஊற்றி மென்மையான மாவாக பிசையவும். மேலே சிறிது எண்ணெய் தடவி மூடி வைக்கவும். பின்பு வாழைஇலை சிறிய துண்டுகளாக வெட்டவும். மாவை சிறிய உருண்டையாக எடுத்து தட்டி நடுவில் பூரணம் வைக்கவும். மடித்து இலைக்குள் வைத்து அடுக்கவும். இட்லி பாத்திரத்தில் 10-15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். இலை நறுமணம் வந்ததும் எடுத்துவிடலாம்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments