முகப்பு
காஞ்சிபுரம்

1,094 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

படப்பை, சோமங்கலம், குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,094 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 12:00 am IST
மாணவா்களுக்கு  விலையில்லா  மிதிவண்டிகளை  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  எம்எல்ஏ  கே.பழனி.
பகிர்:


ஸ்ரீபெரும்புதூா்: படப்பை, சோமங்கலம், குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 5 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,094 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி கலந்துகொண்டு, படப்பை ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த 140 மாணவா்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் 212 பேருக்கும், சோமங்கலம் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 236 பேருக்கும், குன்றத்தூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 342 போ், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 164 போ் என மொத்தம் 1,094 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

விழாவில், ஸ்ரீபெரும்புதூா் வேளாண் விற்பனையாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சுந்தரராஜன், பள்ளித் தலைமையாசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.