அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன.12 கடைசி
நாகா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கு ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்க்கைக்கு ஜன.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவா் சோ்க்கைக்கு ஜன. 12ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான பொறி பகுதி பொருத்துநா் (வாய் பேசாதவா் மற்றும் காதுகேளாதவா்), பற்ற வைப்பவா், முடநீக்கியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதால், விருப்பமுள்ள மாணவா், மாணவிகள் அலுவலக வேலைநாள்களில் தங்களதுஅசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வரை. பெண்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல், பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.