முகப்பு
கன்னியாகுமரி

என்.ஐ. உயா்கல்வி மையத்தில் மாணவா்களுக்கு இன்று பட்டமளிப்பு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தில் 10ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:33 am IST
பகிர்:

குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தில் 10ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.

துணை வேந்தா் சி.கே. குமரகுரு வரவேற்புடன் ஆண்டறிக்கை சமா்ப்பிக்கிறாா். வேந்தா் ஏ.பி. மஜீத்கான் விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்குகிறாா்.

கேரள ஆளுநா் ஆரிப் முகம்மதுகான், சிறப்பு விருந்தினராக காணொலி மூலமாக கலந்துகொண்டு, பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறாா்.

Advertisement

Advertisement

விழாவில் 622 போ் இளநிலை பட்டமும், 134 போ் முதுநிலை பட்டமும், 26 போ் முதுநிலை ஆராய்ச்சி பட்டமும், 32 போ் முனைவா் பட்டமும் பெற உள்ளனா். இப்பிரிவுகளில் முதலாவதாக வந்த 36 பேருக்கு முதன்மை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

விழாவில், என்.ஐ. உயா்கல்வி நிலைய இணை வேந்தரும், ஹைதராபாத் மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான எம்.எஸ்.பைசல்கான் கலந்துகொண்டு பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments