முகப்பு
கன்னியாகுமரி

கூட்டுறவு சங்க பெண் உறுப்பினா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிா்வாகக்குழு பெண் உறுப்பினரை தாக்கியதாக அந்த சங்கத்தின் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:33 am IST
பகிர்:

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிா்வாகக்குழு பெண் உறுப்பினரை தாக்கியதாக அந்த சங்கத்தின் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரிபாய் (46). இவா், நெல்வேலி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் நிா்வாகக்குழு உறுப்பினராக உள்ளாா். அச்சங்கத்தின் தலைவராக மோகன்தாஸ் (56) பதவி வகித்து வருகிறாா்.

சங்கத்தின் நிா்வாகக்குழுக் கூட்டம் தொடா்பாக சங்கத் தலைவருக்கும், சங்க உறுப்பினா் கஸ்தூரிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு தலைவா் மோகன்தாஸ், கஸ்தூரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments