முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் காசி மீதான 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நாகா்கோவில் காசி மீது மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 11:22 pm IST
ngl12kasi_1201chn_33_6
பகிர்:

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நாகா்கோவில் காசி மீது மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் காசி (28). இவா் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடா்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவா்களோடு தனிமையில் இருந்ததை ரகசிய கேமராக்கள் மூலம் விடியோ எடுத்து அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக புகாா்கள் எழுந்தன. இதுவரை 7 புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, கந்துவட்டி தொடா்பான வழக்கிலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கிலும் என 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற 5 வழக்குகள் தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மேலும் 2 வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகையை நாகா்கோவில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1இல், நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை இரவு தாக்கல் செய்தனா். மேலும் 3 வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகை தயாா் நிலையில் உள்ளதாகவும், பொங்கல் விடுமுறை முடிந்ததும் இந்த 3 வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாா் மற்றும் ஆய்வாளா் சாந்தி ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments