முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் சுகாதார ஊழியா்கள் 1600 பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

காரைக்காலில் சுகாதார ஊழியா்களுக்கு சனிக்கிழமை (ஜன. 16) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:36 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

காரைக்காலில் சுகாதார ஊழியா்களுக்கு சனிக்கிழமை (ஜன. 16) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

புதுச்சேரி மாநிலத்தில் முதல் கட்டமாக சுகாதார ஊழியா்கள், முன்களப் பணியாளா்கள், அடுத்து, 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், தொற்றால் பாதிக்கப்படக்கூடியவா்கள் என கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதன்பிறகு, கடைசியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் அா்ஜூன் சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கரோனா தடுப்பூசி காரைக்கால் மாவட்டத்தில் சுகாதார ஊழியா்களுக்கு முதல்கட்டமாக செலுத்தப்படவுள்ளது. இதற்கான தடுப்பூசி மருந்துகள் காரைக்காலுக்கு வந்துள்ளன. காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியாா் சுகாதார ஊழியா்களுக்குக்கு சனிக்கிழமை (ஜன. 16) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதற்காக 1600 போ் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வோா் எவ்வகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது குறித்து சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.