சிரி... சிரி...
பதுங்குக் குழிகள் கட்டுவது பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டதே, ஏன்?
'பதுங்குக் குழிகள் கட்டுவது பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டதே, ஏன்?'
'தோண்டும் பொழுது உள்ளேயிருந்த எலும்புக் கூடுகள் 'ஹலோ'ன்னு குரல் கொடுத்துச்சாம்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
Advertisement
'நீ இன்னமும் பாக்கெட் மணி வாங்கிட்டுத்தான் இருக்கீயா?'
'ஆமாம்... முந்தி அப்பாகிட்ட; இப்ப மனைவிகிட்டே!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'சட்டைப் பாக்கெட்டில் எதுவும் இல்ல..!'
'எதுவும் இல்லாம பாக்கெட் எதுக்கு?'
'நீ கொடுத்தா வாங்கிப் போட்டுக்க!'
'டைட்டில் சாங் பாடுறேன்...'
'எங்கே?'
'என் வீட்டுல நடக்கும் ஃபைட்ல...'
'என்ன ராப்பிச்சே... நடுநிசிக்கு வர்றே?'
'காலையில் 'பிரேக் பாஸ்ட்' என்னன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க வந்தேன், தாயீ!'
'நான் கடன் கேட்டா இல்லைன்பார்.... நீ கேள், என்ன சொல்றார்னு பார்ப்போம்!'
'கேட்பது தப்புன்னு அட்வைஸ் பண்ணுவார்!'
'டயல் பண்ணாம ரிசீவரை காதில் வச்சு யாரோடு பேசறே?'
'எனக்கு நானே ரகசியம் பேசிக்கிறேன்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'உன் கணவர் உன்மேல கோபமாயிருக்கார்னு எதைவச்சு சொல்றே?'
'சாம்பார்ல உப்பை அள்ளிக்கொட்டியிருக்கார், பாரு?'
-வசீகரன், தேனாம்பேட்டை.
'படத்துல இடைவேளைக்கு மேல தூங்கிட்டீங்களா, ஏன்?'
'அப்புறம்தான் தியேட்டர்ல ஏசியை ஆன் பண்ணாங்க!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'வீட்டுல ஆள் இருக்கும்போதே திருடப் புகுந்திருக்கீயே... எவ்வளவு தைரியம் உனக்கு?'
'முதல்ல பயமாதான் இருந்தது... போகப்போக சரியா போயிடுச்சுங்க!'
'இப்பவெல்லாம் ஹோட்டல்ல சாப்பிட்ட பிறகு காசு இல்லைன்னு சொன்னா மாவாட்டச் சொல்றது இல்லையா?'
'ஆமா, அதுக்குப் பதிலா விறகு அடுப்பை ஊதச் சொல்றாங்க !'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
'மனைவியே கண்கண்ட தெய்வம்னு மருமகன் நம்ம மகள் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தியிருக்காரு பார்த்தியா?'
'நான்தான் சொன்னேன்ல... மருமகனோட மனசுல நம்ம மகள் ஈசியா இடம் பிடிச்சுடுவாள்னு!'
'வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு தேடிட்டு இருந்தீங்களே, அமைஞ்சுதா?'
'அமைஞ்சுது... ஆனா, சமையல் தெரிஞ்ச மாதிரி அமையல!'
-வெள்ள.துரைமுருகன், சொக்கம்பட்டி.
'நேத்து ஸ்கூலை கட் அடிச்சிட் டு உங்க பையன் சினிமாவுக்குப் போயிருக்கான், சார்!'
'எப்படித் தெரியும் உங்களுக்கு?'
'என் பையனைத்தானே கூட அழைச்சிக்கிட்டுப் போயிருக்கான்!'
'ரெண்டு கண்ணும் தெரியாதவன் எசமான்!'
'பக்கத்து வீடு பாருப்பா...'
'பார்த்துட்டேன்... நவ்தால் 8 லீவர் பூட்டு தொங்குதுங்க!'
-வி.ரேவதி, தஞ்சை.