விடுகதைப் பாட்டு
இலையும் கிளையும் இல்லா மரம் நிலையாய் நிற்கும் நல்ல மரம்!
இலையும் கிளையும் இல்லா மரம்
நிலையாய் நிற்கும் நல்ல மரம்!
-
கோபுர வடிவம் கொண்ட மரம்
காயும் கனியும் கொடா மரம்!
-
சிறுவரைக் கவரும் சிறிய மரம்
சிறு இடம் அடங்கும் பொது மரம்!
-
பறவைகள் அண்டா புதுமை மரம்
படிகளும் கொண்ட விந்தை மரம்!
-
ஒருபுறம் ஏற்றம் உள்ள மரம்
மறுபுறம் இறக்கம் கொண்ட மரம்!
இம்மரம் எதுவென எண்ண மிடு
உன் விடை உடனே உரைத்து விடு!
எஸ் .ஆர்.ஜி. சுந்தரம்