குழந்தைகள் உலகம்

சிரி... சிரி...

எச்சில் இலைக்கு இரண்டு நாய் சண்டை போட்டுக்கிச்சு!

இணையதளச் செய்திப் பிரிவு

'எச்சில் இலைக்கு இரண்டு நாய் சண்டை போட்டுக்கிச்சு!'

'அடடா, அப்புறம்?'

'இதுதான் நேரம்னு வேற ஒரு நாய் இலையை காலி பண்ணிட்டுப் போயிடுச்சு!'



'புறாக்களை ஒழிப்பதில் மன்னர் தீவிரம் காட்டுகிறாரே, ஏன்?'

'புறாக்கள் இருப்பதால்தானே எதிரி போர் ஓலை அனுப்புகிறான்!'



'வேலை எதுவும் செய்யாமல் எதுக்கு வெட்டியா ஆபீஸ்ல உட்கார்ந்திருக்கே... வீட்டுக்குக் கிளம்பிப் போ!'

'வீட்டுக்குப் போனா என் மனைவி ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருப்பா, சார்!'



'ஊசிக்குப் போய் சின்ன புள்ள மாதிரி அழறீங்களே?'

'ஊசிக்காக அழல சிஸ்டர்... பீசை நெனச்சதும் கண்ணீர் தானா வருது!'

-வி.ரேவதி, தஞ்சை.



'இங்கே ரமேஷ் யாரு... அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு...'

'மேடம், அவங்களுக்கு முன்னாடியே நான் வந்தேன். எனக்கு ஒன்னும் சொல்லாமல் அவருக்குச் சொல்றீங்களே?'



'சிபிஐ டீம்ல நம்ம பையன் ஒருத்தன் இருக்கான்.'

'அப்படியா, ரொம்ப சந்தோஷம்... என்னவா இருக்காரு?'

'விசாரணைக் கைதியாத்தான்.'

-ராஜேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி .



'டூர் போன இடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் தகராறு வந்துருச்சு... உடனே ரூம் போட்டுட்டேன்.'

'எதுக்கு?'

'குடும்பச் சண்டை நாலு சுவத்துக்குள்ளேயே இருக்கணும்னுதான்!'

-ஜி சுந்தரராஜன், திருத்தங்கல்.



'உங்க தலை முடி கொட்டுதுன்னு எப்படிச் சொல்றீங்க?'

'வரும்போது தலைமுடியில ரப்பர் பேண்ட் போட்டுக்கிட்டு வந்தேன்... இப்ப ரப்பர் பேண்ட் மட்டும் தான் இருக்கு, டாக்டர்!'



'அவர் உன்னோட லிப்ஃட் பிரெண்டா... பைக்ல லிஃப்ட் கேட்டு பிரெண்ட் ஆகிட்டாரா?'

'இல்லை, என் ஆபீஸ்ல லிஃப்ட் ஆபரேட்டரா இருக்காரு... !'



'கல்யாணத் தரகரைக் கட்டிக்கிட்டது தப்பாப்போச்சா, ஏன்?'

'வீட்டுல என்ன வேலை பண்ணினாலும் கமிஷன் எதிர்பார்க்கிறாரு !'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.



'நேற்று ரயிலில் அப்பர் பெர்த் தான் கிடைத்தது... சரியா தூங்க முடியலை!'

'கீழே உள்ள பெர்த்தை கேட்டு வாங்க வேண்டியது தானே?'

'கீழே தான் யாரும் இல்லையே, நான் என்ன செய்ய?'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'புரோட்டா டேஸ்டா இருக்கு. புரோட்டா மாஸ்டரைக் கூப்பிடுங்க... பாராட்டணும்!'

'அவர் நேத்தே ஊருக்குப் போயிட்டார், சார்!'

-கோ.செழியன், உத்தமபாளையம்.



'புட்பால் வீரர்னு சொல்லி ஏமாத்தி மாப்பிள்ளை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...'

'அப்ப, சரியான 'கோல்'மால் பேர்வழின்னு சொல்லுங்க!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'கால்நடை டாக்டரை கல்யாணம் செய்து கொண்டது தப்பாப்போச்சா, ஏன்?'

'எங்க போனாலும் நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறாரு!'

-தீபிகா சாரதி, சென்னை.

'ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஆள்கள் எப்படிக் கூடுகிறார்கள்?'

'ரேட் பேசி ஆள்கள் பிடிப்பதுக்குன்னே தலைவர் தனி டீம் வைத்துள்ளார்!'



'அந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரியான குடிகாரர்னு எப்படிச் சொல்றீங்க?'

'புதுசா வீட்டு மனை விற்கும் போது, 'டாஸ்மாக் கடை அருகில்'னு விளம்பரம் பண்றாரே!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'அண்டை நாட்டு அரசரும் வீரத்தில் தங்களைப் போலவேதான், மன்னா!'

'எப்படித் தெரியும் புலவரே உமக்கு?'

'நான் அவர்கள் நாட்டுக்குச் சென்ற போது நிறைய இடங்களில் பதுங்குக் குழி தோண்டிக்கொண்டிருந்தார்கள், மன்னா!'

-பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

SCROLL FOR NEXT