தற்போதைய செய்திகள்

மதுரையில் சினிமா பைனான்ஷியர் கைது

மதுரை, டிச.1: கந்துவட்டி வழக்கில், மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்ஷியர் அன்பு கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள துரிசங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர், யுவஸ்ரீ கிரியேஷன்ஸ்

ஜெயப்பாண்டி

மதுரை, டிச.1: கந்துவட்டி வழக்கில், மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்ஷியர் அன்பு கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள துரிசங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர், யுவஸ்ரீ கிரியேஷன்ஸ், யுவஸ்ரீ பிக்சர்ஸ் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில், 2004ம் வருடம் மீசை மாதவன் என்ற படத்தைத் தயாரித்தார். அப்போது, தயாரிப்புச் செலவுக்காக ரூ.20 லட்சத்தை 2 தவணைகளில் மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்ஷியர் அன்புச் செழியனிடம் வாங்கினர். இதற்கு ஈடாக, ரூ. 1 கோடி மதிப்புள்ள 7 பத்திரங்களை அடமானம் கொடுத்தார். இந்தப் பத்திரங்கள் இவரது மனைவி மற்றும் அம்மாவின் பெயர்களில் உள்ளவை. மேலும், 5 வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். செக், லெட்டர் பேட் முதலியவற்றையும் கொடுத்துள்ளார்.

இந்தக் கடனுக்காக நூற்றுக்கு ஐந்து வட்டி வீதம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.1 கோடி வரை கட்டியுள்ளாராம். இருப்பினும், அவர் ஆவணத்தைக் கேட்டபோது, அன்புச் செழியன் கொடுக்கவில்லை. மேலும், காசோலை பணமின்றித் திரும்பினால் உன் மீது வழக்கு போடுவேன் என்று அன்புச் செழியன் மிரட்டினாராம்.

இந்நிலையில், அவர் அடமானம் வைத்த வீட்டு மனையை, மிரட்டி கையெழுத்து பெற்று அன்புச் செழியனின் பினாமி ராமகிருஷ்ணன் என்பவர் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார்.

தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் மதுரை புறநகர் குற்றப்பிரிவு போலீஸார் சினிமா பைனான்ஷியர் அன்புவை நள்ளிரவு கைது செய்து அதிகாலை 2 மணி அளவில் சிறையில் அடைத்தனர். இவர் மீது கந்துவட்டி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முரளி (வயது 52), ராமகிருஷ்ணன் (வயது 39) ஆகியோரும் கைது செய்யபப்ட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

மதுரை நகரில் கந்துவட்டி தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT