முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்னி பஸ் டேங்கர் லாரியுடன் மோதி கோர தீ விபத்து: 7 பேர் பலி

ஈரோடு, நவ.6: ஈரோடு பவானி அருகே சித்தோடு என்ற இடத்தில், அதிகாலை 3.45 மணி அளவில், பெங்களூருவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ்ஸும் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்தது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:47 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:31 AM

ஈரோடு, நவ.6: ஈரோடு பவானி அருகே சித்தோடு என்ற இடத்தில், அதிகாலை 3.45 மணி அளவில், பெங்களூருவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ்ஸும் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்தது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 7 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பஸ் டிரைவரும் பலியானார். மேலும் 23 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஈரோடு, கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதில், பஸ் ஓட்டுநர் சசிகுமார், பெங்களூரு பயணி கிரண்பாய்  மற்றும் நால்வர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.