முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமண உதவித் தொகைக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி கைது

நாகப்பட்டினம், செப்.13: திருமண உதவித் தொகை பெற ரூ.1,200 லஞ்சம் கேட்ட சமூக நல அதிகாரி கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் கருப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வைரப்பன்(54). இவர் தன் மகள் இந்துமதிக்கு திருமண

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:28 PM
பகிர்:

நாகப்பட்டினம், செப்.13: திருமண உதவித் தொகை பெற ரூ.1,200 லஞ்சம் கேட்ட சமூக நல அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம் கருப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வைரப்பன்(54). இவர் தன் மகள் இந்துமதிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். கடந்த பிப்.7 ம் தேதி இந்துமதியின் திருமணம் நடைபெற்றது.

வைரப்பன் தன் மகளின் திருமண உதவித் தொகைக்காக, நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அரசின் சார்பில் இருந்து ரூ. 25 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை தயாராக உள்ளது; அந்தக் காசோலையைப் பெற ரூ. 1200 லஞ்சம் வழங்க வேண்டும் என வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக நல விரிவாக்க அலுவலர் ஏ.புனிதவதி வற்புறுத்தினார்.

லஞ்சம் தர விரும்பாத வைரப்பன் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாருக்கு

தகவல் தந்தார். அவர்களின் அறிவுறுத்தல்படி, ரசாயனப் பொடி தூவிய நோட்டைக் கொடுத்தனுப்பினர் போலீஸார். டிஎஸ்பி மாணிக்கவாசகம் தலைமையிலான போலீஸார் இதனைக் கண்காணித்தனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் வைத்து வைரப்பனிடம் இருந்து ரூ. 1200 பெற்ற போது அலுவலர் புனிதவதியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →