சுசீ ஈமு ஃபார்ம்: 75 ஆயிரம் கோழிகள் தீவனமின்றி தவிப்பு
ஈரோடு, ஆக.7: ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சுசீ ஈம
ஈரோடு, ஆக.7: ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.