தினமணி செய்தி எதிரொலி: டாமின் உள்பட அழகிரி மகனின் குவாரிகளிலும் சோதனை
மேலூர், ஆக.12: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தனியார் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் டாமின் நிறுவனத்திலும் நிகழ்ந்த முறை
மேலூர், ஆக.12: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தனியார் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் டாமின் நிறுவனத்திலும் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து சோதனை மேற்கொள்ளப் படுமா என்று தினமணி செய்தி வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று மாவட்ட நிர்வாகம் டாமின் நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டது.
மேலும், அழகிரியின் மகனுக்குச் சொந்தமான ஒலிம்பஸ் நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் செயல்பட்ட ஒரு தனியார் குவாரி நிறுவனம், தனது குவாரிகளின் கணக்குகளை ஒரு காரில் வைத்து தனது நண்பரின் வீட்டுக்குக் கடத்த முயன்றது. அந்த வாகனத்தை போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அதில், அவர்கள் கணக்குகளை மறைத்து வைக்க முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து காரைக் கைப்பற்றிய போலீஸார் நிறுவனத்தின் கணக்குகளைக் கைப்பற்றினர்.
தொடர்புடைய செய்தி: டாமின்' குவாரிகளும் ஆய்வு செய்யப்படுமா?