டிச.21ல் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மறியல்: உழவர் முன்னணி
சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கடந்த டிச.13-ல் காவிரி உரிமை மீட்புக்குழு எடுத்த முடிவின்படி டிச.21-ல் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழக உழவர் முன்னணி முடிவு செய்துள்ளது.
தமிழக உழவர் முன்னணி செயற்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் தங்க.கென்னடி, சி.ராஜேந்திரன், ரா.சரவணன், என்.ஜெயபாலன், வே.பொன்னுசாமி, கோ.வெங்கடாசலம், அ.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோரிக்கைகள்: காவிரி நீரை பெற்றுத் தராக மத்தியஅரசை நிர்பந்திக்க தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள்) தங்கள் பதவியை ராஜாநாமா செய்ய வேண்டும்; தமிழகஅரசு அனைத்துக் கட்சிகழ், உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டத்தை கூட்டு, தமிழக மக்கள் ஒருங்கிணைந்து மத்தியஅரசுக்கு நெருக்கடி கொடுத்து காவிரிநீரை பெற வேண்டும்; கருகும் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.