தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரம்: காவல்துறை

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குற்றங்களைக் கட்டுப்படுத்த தண்டனை பெற்று வெளியே வரும் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது நாமக்கல் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 6 மாதங்களில் சேலம் சரகத்திலேயே திருச்செங்கோடு வட்டத்தில் மிக அதிகளவில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தவறு செய்யும் குற்றவாளிகளின் இத்தகையை போக்கை தடுக்கும் விதமாக 106 வழக்குப்பிரிவின் கீழ் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது.  நீதிமன்றத்தில் இந்த நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் அளிக்கும் குற்றவாளிகள் அடுத்த ஓராண்டுக்குள் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையுடன் பழைய குற்றத்துக்கான தண்டனையும் சேர்த்து அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT