முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மேலூர், மே 6: மதுரைமாவட்டம் மேலூரில் முகமதியாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மரியம் பீவி(வயது 35). இவரது கணவர் அயூப் கான். இவர் சவுதியில் பணியில் இருந்தார். அண்மையில்தான் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

மேலூர், மே 6: மதுரைமாவட்டம் மேலூரில் முகமதியாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மரியம் பீவி(வயது 35). இவரது கணவர் அயூப் கான். இவர் சவுதியில் பணியில் இருந்தார். அண்மையில்தான் சொந்த ஊருக்குத் திரும்பினார்.  இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மரியம் பீவி நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு  முயன்றுள்ளார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இதனால் கோபமுற்ற மரியம்பீவியின் சகோதரர் அயூப் கான் மீது மேலூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →