தண்டவாளத்தில் மண் அரிப்பு: குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதம்
ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 12 மணிக்கே புறப்பட்டு சென்றது.
கேரளம் மாநிலம் சாலக்குடி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு இன்று காலை தாமதமாகவே வந்தது.
குருவாயூரில் இருந்து நாகர்கோவில், மதுரை வழியாக தினமும் சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட்டது. சாலக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதால் அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் ரயிலிலேயே பல மணி நேரம் காத்துக்கொண்டிருந்தனர் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பிறகு சுமார் 7 மணி நேரம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. வழக்கமாக இந்த ரயில் சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டும். ஆனால் 7 மணி நேரம் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது.
Advertisement
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 12 மணிக்கே புறப்பட்டு சென்றது.