முகப்பு
தற்போதைய செய்திகள்

உலக யோகா சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவருக்கு பாராட்டு

தற்போதைய செய்திகள்

உலக யோகா சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவருக்கு பாராட்டு

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவரான எம்.மணி உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது,

ஸ்ரீ சாய் ராம் அறக்கட்டளை மற்றும் மலேசியா வாழ் இந்தியர்கள் முன்னேற்ற சங்கம், சிங்கை தமிழ்ச் சங்கம் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் நடத்திய உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் டி.ஜே.எஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவரான எம்.எணி பங்கேற்றார்.

பல நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பெற்ற இந்த போட்டியில் மாணவர் எம்.மணி தனது திறமைகளை வெளிகாட்டி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று கடந்த வாரம் நாடு திரும்பினார். சாதனை மாணவரின் எம்.மணியின் திறமையை பாராட்டும் வகையில் அவர் படிக்கும் டி.ஜே.எஸ் தொழில்நுட்பட கல்லூரியில் அவருக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் சுவாமிநாத சோதமசுந்தரம் வரவேற்றார். நிர்வாகி அதிதாரி பாபு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டி.ஜே.எஸ்  கல்வி குழும தலைவரான டி.ஜே.கோவிந்தராஜன் சாதனை மாணவரை பாராட்டி பரிசு வழங்கினார்.

விழாவில் மாணவர் எம்.மணியின் குரு யோகிஸ்ரீ அமுதபாரதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →