முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது: 5 மணி நேரம் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் நேசகுமாரை(30) போலீஸôர் கைது செய்தது

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது: 5 மணி நேரம் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் நேசகுமாரை(30) போலீஸôர் கைது செய்தது

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் நேசகுமாரை(30) போலீஸôர் கைது செய்தது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காததை கண்டித்து கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய 5 மணி நேர சாலை மறியலால் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் நேசகுமார். இவரை வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் போலீஸôர் மாதர்பாக்கம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் கைது செய்தனர்.

நேசகுமார் எதற்காக கைது செய்யப்பட்டார், அவரை எந்த காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர் என்ற தகவல் தெரிவிக்கப்படாததால் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு பகுதியில் கும்மிடிப்பூண்டி-சத்தியவேடு சாலையில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் சுமார் 50 பேர்களுடன் துவங்கிய சாலை மறியலில் நேரம் ஆக ஆக பல்வேறு பகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துக் கொண்டதால் பதட்டம் கூடியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை போலீஸôர் எதற்காக கைது செய்தனர் என்பது குறித்து கட்சியினரும், பொதுமக்களும் கேட்டதற்கு போலீஸ் தரப்பில் இருந்து எங்களுக்கு தெரியாது என்ற பதிலே வந்தது. ஒரு கட்டத்தில் நேசகுமாரின் சகோதரி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்ற போது அங்கிருந்தவர்கள் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் பகல் 12 மணி வரை தொடர்ந்தது. அது வரை கூட சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு நேசகுமார் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. பதட்டம் காரணமாக பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீóஸ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸôர் காயலார்மேடு பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் இது குறித்து முழு தகவல் அளிப்பதாக போலீஸôர் கூறியதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலை விலக்கிக் கொண்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்றனர்.

அங்கு கோட்டாட்சியர் கந்தசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் மாவட்ட செயலாளர் ரவி எடிசன்ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெமினி, நீலமேகம், கிருஷ்ணராஜ், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் நெடுஞ்செழியன், கட்சி நிர்வாகிகள் பால்செல்வம், பேட்டை குமார், தமிழன்செல்வன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டாட்சியர் கந்தசாமி கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் நேசகுமார் மீது இரு வழக்குகள் பதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரை பொன்னேரி கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாகவும் அங்கு சென்று முழு விவரங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கட்சி பிரமுகரை எந்த காரணத்திற்காக கைது செய்தனர், அவரை எங்கு வைத்து விசாரிக்கின்றனர் என்ற விவரத்தை தராமல் காவல் துறையினர் அலைகழித்தனர் என்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனமக்கள் மீது மட்டும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாகவும் புகார் கூறினர்.

இந்த சம்பவத்தால் கும்மிடிப்பூண்டி பகுதியில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பதட்டம் நீடித்தது. இந்நிலையில் இந்நிகழ்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கும்மிடிப்பூண்டியில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →