தருமபுரி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
தருமபுரி அருகே, ஒரு பிரிவினரின் கிராமங்கள் வேறொரு சமூகத்தவரால் எரிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே, ஒரு பிரிவினரின் கிராமங்கள் வேறொரு சமூகத்தவரால் எரிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி நாயக்கன்கொட்டாய் அருகே நிகழ்ந்த கிராமங்கள் எரிப்பு சம்பவத்தில், கலவரத்தைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற புகார் எழுந்தது. இதை அடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.