அரூர் அடுகே எஸ்.பட்டி கிராம மக்கள் இன்று காலை திடீர் என ஊத்தங்கரை - சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 14ம் தேதி இரவு 12 மணிக்கு அரசுப் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சக்திவேல் (24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், எஸ்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (42), சேட்டு (36) சாந்தலிங்கம் (27) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் இதில் தொடர்புடையதாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீஸார் தங்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறிய கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.