முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

சிதம்பரம் நகரில் மர்ம நபர்களால் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடிகள் புதன் கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சிதம்பரம் நகரில் மர்ம நபர்களால் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடிகள் புதன் கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டது.

சிதம்பரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு ஜீப் வழங்கப் பட்டுள்ளது. வடக்கு ரத வீதியில் இவர் தங்கியுள்ள விடுதியின் எதிரே வியாழக்கிழமை இரவு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஜீப்பின் முன்புறக் கண்ணாடியை மர்ம ஆசாமிகள் மதுபாட்டில்கள் மூலம் தாக்கி உடைத்துள்ளனர். இதே போன்று சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யும் போக்குவரத்து பிரிவு ரெக்கவரி லாரியின் முன்புறக் கண்ணாடியும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.