முகப்பு
தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை: அண்ணாமலை நகரில் சிமெண்ட் ஒர்க்ஸ்க்கு சீல்!

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக சிதம்பரம் அண்ணாமலைநகர் சிமெண்ட் ஒர்க்க்ஸில் டெங்கு கொசு முட்டைகள் இருந்ததால் அந்த கடைக்கு வருவாய்துறையினர் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக சிதம்பரம் அண்ணாமலைநகர் சிமெண்ட் ஒர்க்க்ஸில் டெங்கு கொசு முட்டைகள் இருந்ததால் அந்த கடைக்கு வருவாய் துறையினர் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் ஒர்க்ஸ் உள்ளது. அங்கு சிதம்பரம் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராமன், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவஜோதி, வீரமணி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிமெண்ட் தொட்டியில் தேங்கியிருந்த நீரில் டெங்கு கொசுவின் லார்வா முட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மண்டல துணைவட்டாட்சி ராஜாராமன் அக்கடையை பூட்டி சீல் வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.