சிதம்பரத்தில் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவ பொம்மை எரிப்பு
சிதம்பரத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் தெற்கு சந்நிதி தெரு முன்னர் கூடிய தமிழக உழவர் முன்னணி அமைப்பினர், தமிழகத்துக்கு காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட இப்போது திறந்துவிட மாட்டோம் என்று கூறிய கர்நாடக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.