முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரியில் திடீர் சோதனை: 30 போலி டாக்டர்கள் கைது

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:07 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், தருமபுரி மாவட்டத்தின் அரூர், பெண்ணாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய இடங்களில்

30க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தகுந்த பயிற்சி மற்றும் பட்டம் இல்லாமலேயே மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இன்னும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.