தற்போதைய செய்திகள்

காவிரி போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

 கர்நாடகத்தில் காவிரி போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

மு.பெரியசாமி

 கர்நாடகத்தில் காவிரி போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

 காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கன்னட அமைப்புகள் சனிக்கிழமை, முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர். சனிக்கிழமை, மைசூரில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை மைசூரிலேயே போராட்டக்காரர்கள் மறித்தனர். இதையடுத்து,  ரயில்வே போலீஸார் விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் இருந்து ரயிலை மீட்டு, அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, அந்த ரயில் மண்டியா கடக்கும்போது, அங்கு திரண்ட விவசாயிகள், அந்த ரயிலை மறித்து, மைசூருக்கே திருப்பி அனுப்பினர்.

 கொச்சியில் இருந்து சனிக்கிழமை பெங்களூர் வந்த கொச்சி- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரவீன் ஷெட்டி தலைமையிலான ரக்ஷனவேதிகே அமைப்பினர் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ரயில்கள் அனைத்தும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் அதில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூருக்கு வந்த ரயில்களில் வந்தவர்கள், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்டவை இயங்காததால், வீட்டுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

 இதைத் தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே, பெங்களூர் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முழு அடைப்பையொட்டி, பெங்களூர்- மைசூர் இடையே இயக்கப்படும் மைசூர்- பெங்களூர் சிட்டி பயணிகள் ரயில் (வண்டி எண்.56229), மைசூர்-பெங்களூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.56232), மைசூர்- பெங்களூர்- மைசூர் பயணிகள் ரயில் (வண்டி எண்கள் (56237, 56238) ஆகியவை சனிக்கிழமை மட்டும் ரத்து செய்யப்பட்டன. மைசூர்- ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று, பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிற்கும்.

 பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் தார்வாட் சித்தகங்கா இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12725), ஹூப்ளி வரை மட்டுமே இயக்கப்படும். அங்கிருந்து தார்வாட் செல்வது ரத்து செய்யப்படுகிறது. அதே போல, திங்கள்கிழமை தார்வாடில் இருந்து ஹூப்ளி வரும் சித்தகங்கா இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண்.12726) ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT