முகப்பு
தற்போதைய செய்திகள்

கறவை மாடு கடன் கேட்டு விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்கக்கோரி, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

திருவண்ணாமலை அருகே உள்ள தண்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்கக்கோரி, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தண்டரை கிராம தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கிளை சார்பில் இப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏஜடியுசி மாவட்ட துணைத் தலைவர் கு.ஜோதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

வட்டச் செயலாளர் இரா.வீரபத்திரன், வட்டத் தலைவர் எஸ்.திருஞானம் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். 97 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன்தொகையை உடனே வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.