தற்போதைய செய்திகள்

சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது திருப்பதி நவராத்திரி பிரமேற்ஸவம்

எம்.ஆர்.சுரேஷ் குமார்

நவராத்திரி பிரம்மோற்ஸவத்தில் 9 நாள் உண்டியல் வருமானம் ரூ.12,93,51,000 என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செயல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

திருப்பதி நவராத்திரி பிரமோத்ஸவம் இடையூறு ஏதும் இன்றி நடைபெற்றது. இதற்காக அனைத்துத் துறை சார்ந்தவர்களும் ஒத்துழைத்தனர். அதர்காக அனைவருக்கும் நன்றி. 2010ம் ஆண்டு நடைபெற்ற ந்வராத்திரி பிரம்மோத்ஸவத்துக்கும் இப்போது நடந்து முடிந்த பிரமோத்ஸவத்துக்கு வேறுபாடு உள்ளது.

இந்த 9 நாள் உண்டியல் வருமானம் ரூ.12,93,51,000. லட்டுகள் 17,20,532 விற்பனை ஆகின. ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள் 4,74,888 பேர். நடைபாதையாக வந்தவர்கள் 1,41,515 பேர். ஆந்திர மாநில போக்குவரத்து மூலம் 7,68,718 பேர் பயணித்துள்ளனர். 2,34,515 பேர் முடி காணிகை செலுத்தியுள்ளனர்.

இந்த முறை நவராத்திரி பிரமோத்ஸவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இத்தாலி, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் தர்ம தரிசன வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர் என்றார் அவர்.

முன்னதாக, திருமலை நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் நேற்று திங்கள் இரவு குதிரை வாகனத்தின் பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்தார். கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம் இன்று சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. அப்போது, கோயில் குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆண்டுகால அனுபவங்கள் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம்: பிரதமர் மோடி

பிரியமானவளே... பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்

மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

கருடன் வெற்றி: இயக்குநருக்கு மாலை அணிவித்த நடிகர் சூரி!

’சூப்பர் ஹீரோக்கள்’ வரிசையில் இடம் பெற்றாரா சத்யராஜ்? - வெப்பன் திரை விமர்சனம்

SCROLL FOR NEXT