முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக அரசின் நீர்தேக்க திட்டத்தை எதிர்த்து கண்ணன்கோட்டையில் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி,செப்.12: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் அமைக்கப்பட உள்ள தமிழக அரசின் நீர்தேக்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி கண்ணன்கோட்டையில் இன்று சாலை மறியல் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அ

தற்போதைய செய்திகள்

தமிழக அரசின் நீர்தேக்க திட்டத்தை எதிர்த்து கண்ணன்கோட்டையில் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி,செப்.12: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் அமைக்கப்பட உள்ள தமிழக அரசின் நீர்தேக்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி கண்ணன்கோட்டையில் இன்று சாலை மறியல் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அ

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:52 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி,செப்.12: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் அமைக்கப்பட உள்ள தமிழக அரசின் நீர்தேக்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி கண்ணன்கோட்டையில் இன்று சாலை மறியல் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ராஜன் ஏரி தேர்வாய் கண்டிகை ஏரி ஆகியவற்றை இணைந்து கண்ணன்கோட்டையில் பகுதியில் ரூபாய் 330 கோடி செலவில் புதிய நீர்தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்தில் 1 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைத்து அதை சென்னை குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்த்திற்காக சுமார் 1376 ஏக்கர் பட்டா மற்றும் புறம்போக்கு விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நிலங்களை கையகப்படுத்த அளவீடு செய்யும் பணியில் வருவாய் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்களும் அ.தி.மு.க பிரமுகர்களுமான கோபால், முருகன் தலைமையில் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த 350 பேர் கண்ணன்கோட்டை வழியே மாதர்பாக்கம் செல்லும் சாலையில் இன்று காலை 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கைய்யா, வட்டாட்சியர் ராஜசேகர், வருவாய் அலுவலர் பரமசிவம் வந்து கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் ராஜன் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசினார்கள்.

அப்போது அவர்கள் அரசின் இந்த திட்டத்திற்காக கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 750 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதால் விவசாயத்தை மட்டுமே  நம்பி வாழ்க்கை நடத்தி வரும் தங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படுவதால் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கூறியதை தொடர்ந்து பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் இது குறித்து இன்றே பேசி முடிவெடுக்கலாம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து  சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →