முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக சட்டபேரவை தேர்தல் மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக விளங்கும்: ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி

கர்நாடக மாநில தேர்தல் மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக விளங்கும் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி தெரிவித்தார்.

Updated On : 1 மே 2013, 7:18 pm IST
பகிர்:

கர்நாடக மாநில தேர்தல் மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக விளங்கும் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை அவர் பேசியது: மாநிலத்தில் இதுவரை ஆட்சி செய்த பாஜக, மஜத மீது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். முறைகேடு மற்றும் வளர்ச்சி பணிகளை முடக்கியுள்ள ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்க வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். கர்நாடகம், ஆந்திரா மாநிலங்கள் காங்கிரஸின் தங்ககோட்டைகள் என்றே கருதப்படுகின்றனர். இவை இரண்டும், காங்கிரஸ் கட்சிக்கு சிரமம் ஏற்பட்ட போதேல்லாம் அதனை கைதூக்கிவிட்ட மாநிலங்கள் என்றே கூறவேண்டும். கர்நாடக காங்கிரஸார் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சிறப்பான வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் பெங்களூர் மாநகரம், சிறுபான்மையினர் வளர்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. மக்களைவை தேர்தலுக்கு முன்னோடியாக கர்நாடக சட்டப்பேரவை விளங்கும் என்றார்.

மேலும் கர்நாடகம், ஆந்திரமாநிலங்களிடையே உள்ள நதிநீர் பங்கீட்டு பிரச்னையை சுமூகமாக பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். போலாவரம் குடிநீர் திட்டத்தின் மூலம் கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் பயனடையும்.  மொத்தம் 35 டிஎம்சி தண்ணீரில் கர்நாடகத்திற்கு 21 டிஎம்சியும், மகாராஷ்டிரத்திற்கு 14 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படும். தெலுங்கானா உதயம் என்பது ஒட்டு மொத்த ஆந்திரமக்களின் உணர்வு பூர்வமான விஷயம். இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இதற்கான காலத்தை அறுதியிட்டு கூறமுடியாது. பெல்லாரி மாவட்டத்தில் எல்லைபகுதியில் நிலங்களை கையகத்தியதாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் உத்தரவின்படி நடந்து கொள்வோம் என்றார். முன்னதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியில் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் தொழிலாளர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.