ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்குத் தீ வைப்பு
கோவை அருகே ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை அருகே ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகரில் ஜெயலலிதா பேரவை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அது தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டது.
இங்கு இன்று புதன்கிழமை காலை மே தினக்கொண்டாட்டம் நடைபெற இருந்தது. இந் நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டுத் தப்பி ஓடினர். இதில் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
Advertisement
Advertisement
புதன்கிழமை காலை இதன் விவரம் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீ வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.