வீட்டுக்கு முன் மது குடித்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்
அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு முன் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கி மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு முன் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கி மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை கீரைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(35). இவரது வீட்டிற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர் வரையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக சந்திரன் மனைவி என் வீட்டிற்கு முன்பு உட்கார்ந்து மது குடிக்கக் கூடாது என தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 4 பேரும் கண்டபடி பேசியுள்ளனர். அதோடு, அவரை தாக்கி மூக்குடைத்ததில் படுகாயம் அடைந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். உடனே போலீஸார் பெண்ணின் மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். உடனே மூக்கில் காயம் அடைந்த பெண்ணுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.