தற்போதைய செய்திகள்

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை:சென்னையில் ஏப்.10-ல் நேர்முகத் தேர்வு

அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர்சேர்க்கைக்காக சென்னையில் ஏப்.10-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

ஜெபலின்ஜான்

அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர்சேர்க்கைக்காக சென்னையில் ஏப்.10-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
 தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, டேக்-வாண்டோ, வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேர விரும்புவோர் மாநில அளவிலான தனித்திறன் தேர்வுப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றிருக்க வேண்டும். 
 குழுப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்றிருக்க வேண்டும். 185 செ.மீ. உயரத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி்ருக்க வேண்டும். 1.1.2013-ம் தேதி அன்று 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 விடுதிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏப்.10-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்று ஏப்.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 இதற்கான விண்ணப்பங்களை www.sdat.in - என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்து கூடுதல் விவரம் அறிய ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0424-2223157, 99403-41490 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT