முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகன சோதனை: 120 வாகனங்களிடம் இருந்து ரூபாய் 1,79,000 அபராதம் வசூல்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் உரிய வாகனங்கள் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இருந்த 120 வாகனங்களிடம் இருந்து ரூபாய் 1,79,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:08 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் உரிய வாகனங்கள் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இருந்த 120 வாகனங்களிடம் இருந்து ரூபாய் 1,79,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சோதனைச்சாவடியில் போக்குவரத்து ஆணையர் பிரபாகர்ராவ் ஐ.ஏ.எஸ் தலைமையிலும், இணை போக்குவரத்து ஆணையர் பன்னீர்செல்வம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தரணி, இளங்கோவன், செந்தில்குமார், ஸ்ரீதர் மற்றும் இளமுருகன், ஜெயமனோகர் உட்பட 30 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேலாக கூடுதலாக எடை ஏற்றிய லாரிகள், உரிமை கட்டாத லாரிகள், முறையான அனுமதி பெறாத லாரிகள் என்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை பெத்திக்குப்பம் சோதனைச்சாவடியின் பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கான உள் மற்றும் தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கான வெளி என இரு சோதனை சாவடிகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 120 லாரிகள் பிடிபட்டது.

போக்குவரத்து துறையின் சார்பாக இது போன்ற அதிரடி சோதனைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசை ஏய்த்து வரும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இந்த சோதனையின் போது தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →