முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் முழுவீச்சுடன் இயங்கத் தொடங்கியுள்ள அரசு நியமித்த நிர்வாகி அலுவலகம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியாக தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அலுவலகம் முழுவீச்சுடன் இயங்கத் தொடங்கியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. மேற்கண்ட இருவரும் இன்று(ஏப்.8) பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா அலுவலகத்தில் பொறுப்பேற்றனர். அரசு நிர்வாகி நியமனத்திற்கு பின் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் மக்கள்-தொடர்பு அதிகாரி அலுவலகம் காலி செய்யப்பட்டு, புதிய நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவிற்க்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிக்கு உதவியாக வட்டாட்சியர்கள், உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர் நிர்வாக பணியினை கவனிக்க தொடங்கியதால் முழுவீச்சுடன் அவ்வலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →