ஈரோட்டில் கூட்டுறவுத் தேர்தல் பிரச்னை: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு அருகே வில்லரசம்பட்டி நால் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு அருகே வில்லரசம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கோடம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நலச் சங்கம் சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், 11 பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். 146 பேர் ஓட்டு போடலாம்.
இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இவர்களில் முதல் 24 பேருக்கு மட்டுமே வேட்பு மனு கொடுப்பார்கள் என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும், அதிமுகவினர் தங்கள் தரப்பில் இருந்து 300 பேரை வரிசையில் நிற்க வைத்து விட்டார்கள் என்பதால், மற்றவர்கள் எவரும் மனு வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், வில்லரசம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.