சிதம்பரம் தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்!
அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜெனம் சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும். பங்குனி அமாவாசையை முன்னிட்டு
சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு அர்த்தசாம பூஜை மற்றும் மகாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜெனம் சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும். பங்குனி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தில்லைக்காளியம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் சிறப்பு அர்த்தசாமபூஜை நடைபெற்றது.
ஸ்ரீவிநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி சந்திதியில் நெய்தீப ஆராதனை வழிபாடும், ஸ்ரீதில்லைக்காளிக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலகாப்பு, குங்குமகாப்பு செய்யப்பட்டு வாசனை திரவியம் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு, வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தில்லைக்காளியம்மன் காட்சியளித்தார். நிகழ்ச்சியை பல்மருத்துவர் மகாதேவ ஆச்சாரியார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வேலன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் பாலசுப்பிரமணியன், உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சின்னையன், அருள், கார்த்திகேயன், சரவணன், ஓய்வுபெற்ற உதவி பதிவாளர் சீனுவாசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் செய்திருந்தார்.