டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினி பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினி பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கணினி பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் தொழில்நுடபத் துறையில் கணினி பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு டி.ஜே.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். கணினி துறை தலைவர் ஆர்.ஜனார்த்தனம் துவக்க உரையாற்றினார்.
கருத்தரங்கில் டி.ஜே.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பேசுகையில் குறிக்கோளுடன் மாணவ, மாணவிகள் செயல்படும் போது சிறப்பான வெற்றியை அவர்களது வாழ்க்கையில் பெற முடியும் என்றதோடு டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் பி.இ கணிப்பொறியியல், இயந்திர பொறியியல் துறையில் கூடுதலாக 60 இடங்களும், புதிதாக எம்.இ படிப்பில் கணிப்பொறியியல் மற்றும் வி.எல்.எஸ்.ஐ ஆகிய பாடப்பிரிவுகள் வருகின்ற கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளது என்றார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சென்னை ஐ.கேட் நிறுவன திட்ட இயக்குனர் பி.எஸ்.அருணாச்சலம் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசும் போது குறிப்பிட்ட குறிக்கோளுடன், வெளிப்படை தன்மையுடன் மாணவர்கள் எந்தவொரு செயலையும் செய்யும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.பி.எம் நிறுவனத்தை சேர்ந்த அர்ஜூன்ராம், சரவணன், பழனிச்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து ஆராய்ச்சி கட்டுரை மலரை டி.ஜே.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் வெளியிட ஐ.கேட் நிறுவன திட்ட இயக்குனர் பி.எஸ்.அருணாச்சலம் பெற்றுக் கொண்டார்.
இந்த கருத்தரங்கில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மதுரை மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 85 கல்லூரிகளில் இருந்து 138 பேர் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர். இந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நடுவர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயலட்சுமி, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர், கே.சி.ஜி பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜோஷ் ஆனந்த், யு.எஸ்.ஏ வெப் இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறந்த கட்டுரைகளை தேர்ந்தெடுத்து சான்றிதழ்களை வழங்கினார்கள்.
கருத்தரங்கின் முடிவில் பேராசிரியை படி அலக்கியா நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணினி துறையினரும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.