பணி உத்தரவு நகல் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: சத்துணவு அலுவலக எழுத்தர் கைது
சத்துணவு அமைப்பாளரிடம் பணி உத்தரவு நகல் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சத்துணவு அலுவலக எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
சத்துணவு அமைப்பாளரிடம் பணி உத்தரவு நகல் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சத்துணவு அலுவலக எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் சத்துணவுப் பிரிவு அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார் ரவீந்திரன்.
கோபாலபுரம் பள்ளியில் சத்துணவு அமைப்பாலராகப் பணியாற்றியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த செல்லையா. இவர் தனது சொந்தப் பிரச்னையால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு முடிந்து, மீண்டும் பணியில் சேர ஆணை வந்த நிலையில், அவர்
Advertisement
துரைச்சாமிபுரம் பள்ளியில் பணியில் சேர உத்தரவு வந்துள்ளது. இதற்கான பணி உத்தரவைப் பெற நேற்று விருதுநகர் சத்துணவு அலுவலகத்துக்கு வந்தார் செல்லையா. அப்போது அவரிடம் ரூ.3 ஆயிரம் தந்தால்தான் பணி நியமன உத்தரவு நகலைத் தருவேன் என்று ரவீந்திரன் கூறியுள்ளார். அதற்கு செல்லையா நாளை வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு வந்தவர், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தலில் ரூ.3 ஆயிரத்தை ரவீந்திரனிடம் செல்லையா வழங்கியபோது பிடிபட்டார். ரவீந்திரனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.