முகப்பு
தற்போதைய செய்திகள்

நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஊதியத்தை வழங்க வேண்டும்: நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்பட்ச ஊதியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தமிழ்நாடு நியாயவிலைக்கட்டை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.ஜெயச்சந்திரராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தொகுப்பூதியம் பெறும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்பட்ச ஊதியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். எங்களது கோரிக்கையை ஏற்று ஊதியத்தை உயர்த்தி வழங்க உள்ள முடிவை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் நுகர்பொருள் வாணிபக்கழக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, தமிழக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்கள் என முழு நம்பிக்கையில் உள்ளோம்.

பொதுவிநியோக திட்ட செயல்பாடு முழுவதும் 100 சதவீத கணினி மயமாக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியமான உணவுப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். போலி குடும்ப அட்டைகளை ஒழித்திட கைவிரல் ரேகை பதிவு செய்து டிஜிட்டல் முறையில் புதிய குடு்ப அட்டைகள் வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும் என ஜி.ஜெயசந்திரராஜா தெரிவித்தார். அப்போது மாவட்டத் தலைவர் துரை.சேகர், பிரசார செயலர் ஏ.நரசிம்மன், செயற்குழு உறுப்பினர்கள் பி.இளவரசன், எஸ்.யேசுராஜ், ஆர்.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →