முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை தமிழக அரசே ரத்து செய்ய வேண்டும்: தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து கடந்த 11-8-2011 ஆணையிட்டார். மூவரை தூக்கிலடப்படும் நாளும் குறிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகமே போர்க்களம் பூண்டது. குமரி முதல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

புல்லார் வழக்கு தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும். எனவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை அரசமைப்பு விதி 161-ன் கீழ் தமிழகஅரசே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேவேந்திரபால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனுவை நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ.முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றப் பிரிவு 12-4-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படுவோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுக்கக்கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து கடந்த 11-8-2011 ஆணையிட்டார். மூவரை தூக்கிலடப்படும் நாளும் குறிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகமே போர்க்களம் பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றன. செங்கொடி என்பவர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். இச்சூழலில் இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்தது. இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் முன்மொழிய, தமிழக சட்டப்பேரவையில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது.

ஆனால் இவ்வழக்கில் எவ்வித தொடர்பும் இல்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இம்மூவர் தூக்கு தண்டனை குறித்த வழக்கை தன் விருப்பமாக உச்சநீதிமன்றம் மாற்றிக் கொண்டது. கருணை மனு அளித்து மிக நீண்ட காலத்திற்கு பிறகு அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திரபால் சிங் புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே, இவ்வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந்த நீதிமன்றம் கருதுகிறது என முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.

இந்நிலையில் புல்லார் வழக்கில் கருணை மனு அளித்து மிக நீண்ட காலத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்துவிட்டது. புல்லார் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்சநீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கு ஆபத்து உண்டு. இந்நிலையில் மூன்று தமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழகஅரசின் கைகளில்தான் உள்ளது. அரசமைப்பு சட்டவிதி 161-ன் படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து, மாநில ஆளுநர் வழியாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →